மாநகராட்சி சுய உதவி குழு தயாரிப்புகளை பார்வையிட்ட ஆணையர்

மாநகராட்சி சுய உதவி குழு தயாரிப்புகளை பார்வையிட்ட ஆணையர்
X

நாகர்கோவில் மாநகராட்சியில் மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி மேற்பார்வையில் நடைபெறும் சுய உதவி குழு தயாரிப்புகளை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார்.

நாகர்கோவில் மாநகராட்சி நகர்ப்புற வாழ்வாதார மையத்தின் கீழ் பல்வேறு சுய உதவி குழுக்கள் செயல்படுகின்றன.

சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு மானிய கடனுதவி மாநகராட்சி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கடன் உதவி பெற்றவர்கள் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள்.

மேற்படி சுய உதவிக் குழுக்களில் ஒரு பிரிவினர் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள தையல் கடையில் இருந்து மீதமாகும் துணிகளை சேகரித்து மிதியடிகளை தைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

மேற்படி சுய உதவிக்குழுவினர் செய்து வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் இன்றைய தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் தாங்கள் தயாரிக்கும் பொருள்களை நகரில் உள்ள பெரிய கடைகள் மற்றும் மின் வணிகம் மூலமாக விற்பனை செய்து வருமானம் பெருக்கிக்கொள்ள அறிவுரை வழங்கினார்கள்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா