கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சிகிச்சை மையங்கள் தயார்நிலை படுத்தப்பட்டு வருகின்றன. அதன் படி 200 படுக்கை வசதிகளுடன் செயல்பட்ட ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 300 படுக்கைகள் அமைக்கப்பட்டு மொத்தம் உள்ள 500 படுக்கைகளில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி அமைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று தனியார் கல்லூரியான ஸ்காட் கிருஸ்தவ கல்லூரியில் 272 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மையங்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், மேலும் சிகிச்சை குறித்தும் மருந்துகள் இருப்பு குறித்தும் தேவை படும் வசதிகள் குறித்தும் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu