நாகர்கோவில் மாநகர பேருந்து நிலையங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு

நாகர்கோவில் மாநகர பேருந்து நிலையங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு
X
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பேருந்து நிலையங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் முன்னிலையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலையங்களில் சுற்றுப்புறங்களை முழு சுகாதாரத்துடன் வைத்துக் கொள்வதோடு, அவ்வப்போது கிருமிநாசினி தெளித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டார்.

Tags

Next Story