காந்தி ஜெயந்தியையொட்டி மாநகராட்சி பகுதியில் கூட்டு தூய்மைப்பணி: கலெக்டர் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியையொட்டி மாநகராட்சி பகுதியில் கூட்டு தூய்மைப்பணி: கலெக்டர் பங்கேற்பு
X

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கூட்டு தூய்மை பணி நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கூட்டு தூய்மை பணி நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் படி நாகர்கோவில் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 45 தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாநகர் நல அலுவலர், மாநகராட்சி பொறியாளர், துப்புரவு ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கூட்டு தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தற்பொழுது தூய்மை இந்தியா திட்டத்தின் படி இன்றையதினம் மாநகராட்சி பகுதி முழுவதும் கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா