குமரியில் கிறிஸ்துமஸ் விழா: ஜொலிக்கும் தேவாலயங்கள், வீடுகள்

குமரியில் கிறிஸ்துமஸ் விழா: ஜொலிக்கும் தேவாலயங்கள், வீடுகள்
X

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தேவாலயம். 

குமரியில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டிய நிலையில் தேவாலயங்கள், வீடுகள், பொது இடங்கள் வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன.

ஏசு கிறிஸ்து பிறப்பு நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நாளை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாகவே இவ்விழா களைகட்டி உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்கள், வீடுகள் மற்றும் பொது இடங்கள், கண்ணை கவரும் வகையில் பல வண்ண வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன.

இதே போன்று, கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் குழுக்களாக வீடு வீடாக சென்று ஆடிப்பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா விதிமுறைகள் காரணமாக கொண்டாட முடியாமல் போன கிறிஸ்துமஸ் பண்டிகை இரட்டிப்பு மகிழ்ச்சி யோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture