நாகர்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வு

நாகர்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வு
X

நாகர்கோவில் டெரிக் சந்திப்பு முதல் ராமன்புதூர் செல்லும் சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் இன்று கன்னியாகுமரிக்கு மாவட்டம் வந்தார். மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் வந்த முதல்வர் ஸ்டாலின் முதல் ஆய்வு பணியாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பு முதல் ராமன்புதூர் செல்லும் சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து சாலைகளை தரமாக போட வேண்டும் என காண்ட்ராக்டர்களுக்கு உத்தரவிட்டார், பழைய சாலைகளை முழுமையாக அப்புறப்படுத்தி புதிய சாலைகள் போட வேண்டும் எனவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை பணிகள் மற்றும் கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் நடைபெற்று வரும் கட்டுமான மற்றும் பால பணிகளை பார்வையிட புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆட்சியர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!