வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டிய வேட்பாளர்கள்: மக்களின் முடிவால் வேட்பாளர்கள் கலக்கம்

வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டிய வேட்பாளர்கள்: மக்களின் முடிவால் வேட்பாளர்கள் கலக்கம்
X

வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர். 

குமரியில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டிய வேட்பாளர்களை புறக்கணிப்பதாக மக்கள் முடிவு செய்ததால் ஸ்டிக்கர் வேட்பாளர்கள் கலக்கம் அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலில் வந்தது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கட்சி சார்ந்த விளம்பர சுவரொட்டிகள் தேர்தல் அதிகாரிகள் தலைமையில் அகற்றப்பட்டது.

தேர்தல் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கடைபிடித்து வரும் நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 46 ஆவது வார்டில் வேட்பாளர்கள் தங்களது பெயர் மற்றும் கட்சி சின்னம் கொண்ட சிறிய அளவிலான ஸ்டிக்கர்களை வீடு வீடாக ஒட்டி உள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி ஸ்டிக்கர்களை வரிசையாக ஒட்டி வருவதாலும், புதிதாக வண்ணம் பூசப்பட்ட வீடு என்றும் கூட பார்க்காமல் வீட்டின் வாசல் முழுவதும் ஸ்டிக்கர்களை ஒட்டி வருவதால் பொதுமக்கள் ஆத்திரமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

இதனை உடனடியாக தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிய வேண்டும், பெயிண்டிங் செய்ய ஆகும் செலவை வேட்பாளரிடம் இருந்து பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே ஸ்டிக்கர் ஒட்டிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என பொதுமக்கள் முடிவு எடுத்துள்ளதால் ஸ்டிக்கர் வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!