சைக்கிளில் தன்னந்தனியாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

சைக்கிளில் தன்னந்தனியாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்
X

சைக்கிளில் தனியாகச் சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர். 

குமரியில் சைக்கிளில் தன்னந்தனியாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல், வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது கட்சியினர் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் அனைத்து வேட்பாளர்களும் தீவீர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி 46 வது வார்டில் வேட்பாளரராக களம் இறங்கி உள்ள நாம் தமிழர் கட்சியின் தினேஷ் சங்கர் என்கிற வேட்பாளர், தனியாக சைக்கிளில் சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார். 46 வது வார்டு மாநகராட்சியில் முதன்மை வார்ட்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், குப்பைகளை அகற்றி சுகாதாரமான வார்டாக மாற்றி தருவேன் என வாக்குறுதிகளை கொடுத்து தன்னந்தனியாக சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இது பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare