குமரியில் சுட்டெரிக்கும் வெயில்: இளநீர், தர்பூசணி விற்பனை அமோகம்

குமரியில் சுட்டெரிக்கும் வெயில்: இளநீர், தர்பூசணி விற்பனை அமோகம்
X

பைல்படம்.

குமரியில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இளநீர், தர்பூசணி விற்பனை அதிகமாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் இருந்து வருகிறது, சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தற்போது பள்ளிகள் விடுமுறை தொடங்கி உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் நீர் நிலைகளை தேடியும், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களை தேடியும் செல்கின்றனர். இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் உடல் பாதிப்பு அடையாமல் தடுப்பதோடு ஆரோக்கியத்தை கொடுக்கும் இளநீர், தர்பூசணி விற்பனை சூடு பிடித்து உள்ளது. வெளிநாட்டு குளிர்பானங்கள், செயற்கை முறையில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை தவிர்க்கும் பொதுமக்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை நாடுவதால் குமரியில் இளநீர், நுங்கு, தர்பூசணி உள்ளிட்டவை அதிகமாக விற்பனை ஆகி வருகிறது.

Tags

Next Story
ai ethics in healthcare