நாகர்கோவிலில் பிஜேபி கண்டன ஆர்ப்பாட்டம்
அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகர்கோவிலில் பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் முன்பாக மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்துக்களுடைய புனித நாளான வெள்ளிக்கிழமை மற்றும் அதனை தொடர்ந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என வாரத்தில் மூன்று நாட்கள் ஆலயங்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை தமிழக அரசு தடை விதித்து உள்ளதாகவும்.
மேலும் கொரோனாவை காரணம் காட்டி திமுக தவறான பிரச்சாரம் செய்து வருவதாகவும், இந்துக்களின் அனைத்து விழாக்களும் தடுக்கப்பட்டு வருவதாகவும், ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி என அனைத்து இந்துக்களுடைய விழாக்களும் தடுக்கப்பட்டு வருவதாகவும்.
சுவாமி நகைகள் உருக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும், இதுபோன்று இந்துக்களின் வழிபாட்டு உரிமையை கபளீகரம் செய்யும் திமுக அரசை கண்டித்தும் கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu