நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்.

நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்.
X
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்ற வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற வேட்பாளர் காந்தி ஆகியோர் தீவிரமாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடை தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் நாகர்கோவில் தொகுதிக்குபட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக பிரசாரம் செய்தனர்.

முன்னதாக அவர்கள் வடசேரி சோழவந்தார் சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர்கள் வடசேரி, ஓட்டுப்புரைதெரு, ஒழுகினசேரி, கோதைகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேட்பாளர்களை வழிநெடுகிலும் பொதுமக்கள் மேள தாளங்கள் முழங்க வாழ்த்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!