குமரியில் 24 மணி நேரமும் அன்னதானம் செய்யும் ஐயப்பா சேவா சங்கம்
ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நடைபெறும் அன்னதானம்.
கேரளா மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகளுக்காக கடந்த கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் புகழ்பெற்ற மகரஜோதி தரிசனம் தை1 ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி சபரிமலை சென்று திரும்பும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் வந்து அங்கு அமைந்துள்ள சர்வதேச சுற்றுலா தலமான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மற்றும் மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களுக்கு செல்வது வழக்கம்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் வரும் அய்யப்ப பக்தர்களுக்கும் பசியுடன் வரும் பொதுமக்களுக்கும் நாகர்கோவிலில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தினர் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கி வருகின்றனர். பாகுபாடின்றி நடைபெற்று வரும் இந்த நித்திய அன்னதானம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று மண்டல பூஜையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu