பணி நிமித்தம்: இன்று ஆயுத பூஜை கொண்டாடிய அரசு வாகன டிரைவர்கள்

பணி நிமித்தம்: இன்று ஆயுத பூஜை கொண்டாடிய அரசு வாகன டிரைவர்கள்
X

 நாகர்கோவிலில், அரசு வாகனங்களுக்கு இன்று ஆயுத பூஜை போடப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக அரசு வாகன ஓட்டுநர்கள், பணி நிமித்தம் காரணமாக இன்று ஆயுத பூஜையை கொண்டாடினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழாவின் கடைசி நிகழ்வான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. அதே நேரம், பணி நிமித்தம் காரணமாக நேற்று ஆயுத பூஜையை கொண்டாடாத, மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசு வாகன ஓட்டுநர்கள் இன்று ஆயுத பூஜையை கொண்டாடினர்.

அதன்படி, மாவட்ட நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் வாகனங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வாகனங்களுக்கு மாலைகள் அணிவித்த ஓட்டுநர்கள் தீப ஆராதனை காட்டி வணங்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்