குமரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீவிர சோதனை

குமரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீவிர சோதனை
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை மற்றும் அரசு தொடக்க பள்ளிகளில் மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி தலைமையில், ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், பள்ளிகளில் உள்ள சுற்றுச்சுவர்கள் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருவதாகவும், தொடர்ச்சியாக இந்த ஆய்வு பணி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நெல்லை தனியார் பள்ளியில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 3 பள்ளி மாணவர்கள் உயிர் இழந்த நிலையில் இந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படடுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி இயக்குனர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் உள்ள சுற்றுச்சுவர்கள் மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, இதற்காக தனி குழுக்கள் அமைத்து ஆய்வினை தீவிர படுத்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்