குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
X
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில், போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி சபரிஸ் (வயது 20) என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவர் கஞ்சா வியாபாரம், வழிப்பறி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, குற்றவாளி சபரிஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
உங்கள் திறமைககுக்கு உதவியாக அமையும் AI!