சொந்த செலவில் ஆம்புலன்ஸ் -குமரி எம்.பி அசத்சல்

சொந்த செலவில் ஆம்புலன்ஸ்  -குமரி எம்.பி அசத்சல்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் செயல்படும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா நோய் தோற்றால் பாதிக்கபட்ட 600 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களை முதலில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து நோயின் தன்மையைப் பார்த்து அவர்கள் கோவிட் கேர் சென்டர்களில் அல்லது வீட்டு தனிமையில் இருக்க வைப்பது வழக்கம்.

இந்தப் பணிகளுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூடுதலாக தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி அதனை மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

இந்த வாகனம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களை அழைத்து வரவும் பாதிப்பு குணமடைந்து வீட்டிற்கு செல்பவர்களை அழைத்து செல்லவும் பயன்படுத்தப்படும் என மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. குமரி எம்.பி யின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் பாராட்டை பெற்றுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture