குலசேகரபட்டினம் தசரா விழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - இந்து மகா சபா
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில்களில் முதன்மையாக அமைந்துள்ளது குலசேகரப்பட்டனம் முத்தாரம்மன் கோவில், ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா சிறப்பு பெற்றதாக அமையும்.
அதன் படி திருவிழா தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே விரதம் தொடங்கும் பக்தர்கள் கடைசி 10 நாட்கள் பல்வேறு வேடங்கள் தரித்து அம்மனை வழிபடுவார்கள்.இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது.
இந்நிலையில் கேரளா சபரிமலை கோவில், ஆந்திரா திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்ற லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கோவில்களில் அமைந்துள்ள விதிமுறையை போன்று கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருப்பவர்கள் மற்றும் 2 தடுப்பூசி எடுத்து கொண்டவர்களை அனுமதிக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் மாநில தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் கூடிய இந்து மகா சபா அமைப்பினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu