மாவட்டத்தில் குமரி ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது: மாவட்டஆட்சியர்

மாவட்டத்தில் குமரி ஆக்சிஜன் தட்டுப்பாடு  இருக்காது: மாவட்டஆட்சியர்
X

ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

குமரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் கூறும் போது கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன் காரணமான ஏற்பட்டு உள்ள ஆக்சிஜென் தட்டுபாட்டை சமாளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு உத்தரவுப்படி வரும் 10-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் ஊரடங்கை தொடர்ந்து மாநில எல்லையான களியக்காவிளை மற்றும் மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படும். எல்லைக்கு வரும் பொதுமக்களிடம் இ-பாஸ் சோதனை மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்படும். வருவாய் துறை மற்றும் காவல்துறை மூலம் இந்த பணிகள் தீவீரபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture