அதிமுகவின் 50 ஆவது பொன்விழா: குமரியில் கட்சியினர் உற்சாகம்

அதிமுகவின் 50 ஆவது பொன்விழா:  குமரியில் கட்சியினர் உற்சாகம்
X

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவின் பொன் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கடந்த 1972 ஆம் ஆண்டு, எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, இன்று 50 ஆவது வருட பொன்விழாவை கொண்டாடி வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிமுகவினரால் பொன்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில், வடசேரியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு, மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும், மரியாதை செலுத்திய அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோன்று, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சார்பில் பொன்விழா ஆண்டு கழக கொடியேற்றியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!