அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது; குமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது; குமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தற்போதைய தமிழக அரசு அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்றது.

குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!