உள்ளாட்சி தேர்தலை துண்டு துண்டாக கூறு போட்டது அதிமுக - அமைச்சர் காட்டம்

உள்ளாட்சி தேர்தலை துண்டு துண்டாக கூறு போட்டது அதிமுக - அமைச்சர் காட்டம்
X
உள்ளாட்சித் தேர்தலை கூறு போட்டவர்கள் அதிமுகவினர் என தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும் போது தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள நெய்யாறு அணையில் இருந்து நெய்யாறு இடதுக்கரை கால்வாய் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வர வரும் 17 ஆம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

திருவனந்தபுரத்தில் இரு மாநில அதிகாரிகள் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நீர் கிடைத்தால் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செழிபடையும் மேலும் குமரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும், இதனால் நிலத்தடி நீர் உயரும் என கூறினார்.

மேலும் உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக கடிதம் கொடுத்து இருப்பது வேடிக்கையாக உள்ளது, உள்ளாட்சித் தேர்தலை துண்டு துண்டாக கூறு போட்டவர்கள் அதிமுகவினர் தான் என கூறினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நெய்யாறு இடதுக்கரை கால்வாயில் தண்ணீர் திறப்பதை கேரள அரசு தடை செய்துள்ளது பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்னும் நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலையில் 17 ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags

Next Story