மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கல்வெட்டு வைக்க அதிமுக கோரிக்கை

மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  கல்வெட்டு வைக்க அதிமுக கோரிக்கை
X

மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் 

குமரியில் அதிமுக அரசால் 3 கோடியே 57 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கல்வெட்டு வைக்க அதிமுக கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது, மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போதிய வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் அனைத்து வசதிகளும் கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இதனை ஏற்ற முந்தைய அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி ரூபாய் 3 கோடியே 57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

இதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தலைமையில் நடைபெற்ற விழாவில் அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்த தளவாய் சுந்தரம் அடிக்கல் நாட்டினார்.

5 ஏக்கர் நிலப்பரப்பில் ஓட்டுநர் பயிற்சி தளம், சோதனை ஓட்ட தளம், ஆய்வு தளம், வாகனங்கள் நிறுத்த விசாலமான இடங்கள் என அமைக்கப்பட்டதோடு 896 சதுர மீட்டரில் இரண்டு அடுக்குடன் கூடிய அலுவலகம் காத்திருப்பு அரை, கணனி அரை, அலுவலக அரை என தனித்தனி அறைகளுடன் அனைத்தும் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் பிரம்மாண்டமான முறையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டப்பட்டது.

பணிகள் முழுமையாக முடிவடையாமல் இருந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அப்போது திறக்கப்படாத வட்டார போக்குவரத்து அலுவலகம் தற்போது திறக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் எந்த அரசு கட்டியது, ஒதுக்கப்பட்ட நிதி, அடிக்கல் நாட்டப்பட்ட தேதி அடங்கிய கல்வெட்டு தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இல்லாத நிலையில் அதனை மீண்டும் வைக்க வேண்டும் என குமரி மாவட்ட அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story