குமரியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்
கேரளாவுடன் இருந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி மொழிப்போர் போராட்டத்தை மேற்கொண்டனர்,
மார்ஷல் நேசமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை மாய்த்து அதன் பலனாக 1956 நவம்பர் 1 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி மாவட்ட அதிமுக சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்படி கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் தலைமையில் அதிமுகவினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தனது சொந்த நிதியில் இருந்து இரு கால்களும் இல்லாத மாற்று திறனாளி ஒருவருக்கு இருசக்கர வாகனத்தை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu