குமரியில் அதிமுகவின் முதல் வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல்

குமரியில் அதிமுகவின் முதல் வேட்பாளர் வேட்பு மனுவை  தாக்கல்
X

நாகர்கோவில் மாநகராட்சியில் 36 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேலாயுதம் இன்று மாலை தனது வேட்பு மனுவை மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

குமரியில் அதிமுகவின் முதல் வேட்பாளர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், குழித்துறை உட்பட நான்கு நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்ததோடு கன்னியாகுமரி மாவட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் மாநில தலைமையால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் 36 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேலாயுதம் இன்று மாலை தனது வேட்பு மனுவை மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற வேட்பாளர் வேலாயுதத்திற்கு, அவர் போட்டியிடும் வார்டை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பொன்னாடை போர்த்தி வெற்றியை குறிக்கும் வகையில் இரண்டு விரல்களை காட்டி வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ai personal assistant future