நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்

நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்
X
நடுரோட்டில் நின்று தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்த வாலிபர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது வேப்பமூடு பகுதி, 24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டதால் பரபரப்புடன் காணப்படும் இப்பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் பெட்ரோல் கேனுடன் நின்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென நடுரோட்டில் நின்று கொண்டு தனக்கு தானே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் பரவிய தீயின் வேதனை தாங்க முடியாமல் நடுரோட்டில் அங்கும், இங்கு மாக ஓடி பின்னர் சாலையில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து உயிருக்கு போராடியவர் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணைநடத்தினர். விசாரணையில் தீ குளித்தவர் நாகர்கோவில் அருகே உள்ள வடக்குசூரங்குடியை சேர்ந்த செய்யது முகமது என்பவரது மகன் சேக் அலி என்பது தெரியவந்தது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தகராறு செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் சாலையோரம் தங்கி கிடைக்கும் வேலையை செய்து நாட்களை கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்யும் நோக்கில் தீ குளித்து இருப்பதும் தெரியவந்தது. தீ குளிப்புக்கான காரணம் குறித்து கோட்டார் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!