வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 85 லட்சம் பறிமுதல்

வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 85 லட்சம் பறிமுதல்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கல்வி அலுவலகம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வீடு, நீதிமன்ற சாலை அமைந்திருக்கும் முக்கிய பகுதியான ஜெகநாதன் தெருவில் அமெரிக்காவில் பணியாற்றும் பொறியாளர் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.

சமீபத்தில் இவரது மகள்களுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை அவரது வீட்டினுள் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,

சோதனையின்போது ராஜேஷ் வீட்டில் இருந்து கணக்கில் வராத 85 இலட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமண செலவு, ஆடம்பர செலவு உள்ளிட்டவற்றை ரகசியமாக கண்காணித்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டததாகவும் தொடர்ந்து ராஜேஷ்க்கு நெருக்கமானவர்கள் குறித்த தகவல்களை திரட்டி உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கும் சோதனையில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!