8 கிலோ தங்கம் பறிமுதல்

8 கிலோ தங்கம் பறிமுதல்
X
வாகன சோதனையில் கேரளாவில் இருந்து வேனில் கொண்டு வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கையான களியக்காவிளையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி முருகன் தலைமையில், போலீசார் நடத்திய வாகன சோதனையில் கேரளாவில் இருந்து குமரிக்கு வேனில் கொண்டு வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். இது குறித்து விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் இருந்து நகைகள் கொண்டு வந்து குமரியில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்து வரும் நிலையில் இந்த நகை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்கு கொண்டு வரப்பட்டனவா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!