மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு.!

மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு.!
X

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ளது. பேருந்து, ஆட்டோ போன்ற பயணங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு தேவையின்றி வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள குமரிமாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 , மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04652 230984 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!