நாகர்கோவிலில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1432 பேர் பயனடைவு

நாகர்கோவிலில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1432 பேர் பயனடைவு
X
நாகர்கோவில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1432 நபர்கள் பயன்பெற்றனர்.

தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவத் திட்டம் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி திட்டத்தின்படி நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகள் 28 மண்டலமாக தேர்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் இருந்து 28 தன்னார்வ பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சக்கரை நோய், இரத்த அழுத்தம் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் தேவையான மருத்துவ உதவிகள் வழங்குவது போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. இதுவரை மாநகராட்சி பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1432 பேர் பயன் அடைந்து இருப்பதாக நாகர்கோவில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!