1008 சங்கு அபிஷேகத்தில் குளிர்ந்த சிவபெருமான்

1008 சங்கு அபிஷேகத்தில் குளிர்ந்த சிவபெருமான்
X

சிவராத்திரியை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள மகாதேவர் ஆலயத்தில் சிவனுக்கு 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

நாகர்கோவில் வடசேரியில் உள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த மகாதேவர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சங்கு பூஜை நடைபெற்றது.முன்னதாக சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சுவாமி சன்னதி முன்பு நெல்மணிகளால் நடராஜர் சிலை வரையப்பட்டு அதன் மீது 1008 சங்குகளை வைத்து அந்த சங்குகளில் அபிஷேக நீர் நிரப்பப்பட்டு பூஜைகள் நடந்தது.

வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க நடைபெற்ற சங்கு பூஜைக்கு பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக அந்த சங்குகளில் உள்ள நீரை மூலவருக்கு அபிஷேகத்திற்கு கொடுத்து அந்த புனித நீர் மூலம் மூலவருக்கு அபிஷேகம் செய்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!