100 சதவீதம் வெற்றி பெறுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன்

100 சதவீதம் வெற்றி பெறுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன்
X

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 100 க்கு 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். இராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பொன். இராதாகிருஷ்ணன் என் மீது முழு நம்பிக்கை வைத்து கட்சி தலைமை எனக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

நான் அமைச்சராக இருந்த போது செய்த அனைத்து நல்ல காரியங்களையும் கன்னியாகுமரி மக்கள் மனதில் வைத்துள்ளார்கள்.மக்கள் விரும்பும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவேன். இந்தியாவின் முதல் நிலை மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற வேண்டும்.மாவட்ட மக்களின் முழு ஒத்துழைப்புடன் போட்டியிடுகிறேன். 100 க்கு 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.

Tags

Next Story
the future of ai in healthcare