மண்ணுளி பாம்பு கடத்தல் : 3 பேர் கைது - 2.25 லட்சம் அபராதம்..!

மண்ணுளி பாம்பு கடத்தல் : 3 பேர் கைது   - 2.25 லட்சம் அபராதம்..!
X
மண்ணுளி பாம்பு கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு 2.25 லட்சம் அபராதம் விதித்தனர்.

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வழியாக சொகுசு காரில் அறிய வகை மண்ணுளி பாம்பு கடத்தப்படுவதாக பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர், அப்போது வடசேரி பகுதியில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது காருக்குள் மண்ணுளி பாம்பு இருப்பதையும் அதனை கடத்த முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மண்ணுளி பாம்பு கடத்தலில் ஈடுபட்ட ஜோஸ் வில்ப்ரட் , பிரசாந்த் , சதீஷ் சந்திரன் நாயர் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேரளா மாநிலத்தில் இருந்து கணியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய கொண்டுவந்ததும் இதற்காக சூழல் பகுதியில் இருந்து நான்கு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 75,000 வீதம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர் மண்ணுளி பாம்பு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர், மேலும் மண்ணுளி பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!