ஆயுதப்படையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

ஆயுதப்படையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி
X
நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் வாகனங்களை ஆய்வு செய்த அவர் வாகனங்களின் குறைகளை காவளர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து வாகனங்களை நாள்தோறும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் ஆயுதப்படை வளாகம் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கிருந்த போலீசாரிடம் தேவைப்படும் உதவிகள் குறித்தும் வேலைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Tags

Next Story
future ai robot technology