கன்னியாகுமரி: 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டரின் 189 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி வியாழன் கிழமை, மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு வரும் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மற்றும் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஏப்ரல் 10 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி சனிக்கிழமை ஆகிய தினங்கள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது,
இந்த உள்ளூர் விடுமுறை செலவணி முறி சட்டம் படி அறிவிக்கப்பட வில்லை என்பதால் உள்ளூர் விடுமுறை நாளில் மாவட்ட தலைமை கருவூலம், கிளை கருவூலம் இயங்கும் என்றும் அரசு சம்மந்தப்பட்ட அவசர பணிகள் அனைத்தும் தேவையான பணியாளர்களை கொண்டு நடைபெறும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu