நாகர்கோவில் மாநகராட்சியில் 2 லட்சம் பேருக்கு காய்ச்சல் சளி பரிசோதனை

நாகர்கோவில் மாநகராட்சியில் 2 லட்சம் பேருக்கு காய்ச்சல் சளி பரிசோதனை
X

கொரோனா வைரஸ் பரிசோதனை கார்ட்டூன் படம்.

நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாட்டில் மாநகர பகுதிகளில் 2 லட்சம் பேருக்கு காய்ச்சல் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இது வரை 2 லட்சம் நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகமும், நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தொற்று வராமல் தடுக்கவும் வந்தால் அதனை எதிர்கொள்ளவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் போது பல்வேறு கட்ட மக்கள் நலப்பணிகளை மேற்கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகமும் தடுப்பு பணிகளை தீவிரமாக கையாண்டு வருகிறது.

அதன்படி, மாநகராட்சி பகுதி முழுவதும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு சுகாதாரத்துறை மூலமாக காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு தேவைப்படும் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி இது வரை 2 லட்சம் நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மேற்கொண்டு உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!