உச்சம் அடைந்த கொரோனா - ஒரே நாளில் 1017 பாதிப்பு 18 பேர் உயிரிழப்பு.

உச்சம் அடைந்த கொரோனா - ஒரே நாளில் 1017 பாதிப்பு 18 பேர் உயிரிழப்பு.
X
குமரியில் -

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோணா இரண்டாவது அலை பரவல் தீவிரமாக உள்ளது. தினமும் பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 700-க்கு மேல் உயர்ந்து வருகிறது.

இதனால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்களும், நர்சுகளும் திணறி வருகிறார்கள்.

அதே சமயத்தில் கொரோணாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. குமரி மாவட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 908 பேருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழப்பு அதிகரித்து வருவதால் பிணங்களை வைக்க பிணவறையில் இடம் இல்லாமல் வார்டிலேயே பிணங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்டத்தில் இதுவரை கொரோணாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 527 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!