ஆதரவற்றோர்களுக்கு கொரோனா பரிசோதனை, மூன்று வேளை உணவு வழங்கி வரும் தன்னார்வலர்கள்.

ஆதரவற்றோர்களுக்கு கொரோனா பரிசோதனை, மூன்று வேளை உணவு வழங்கி வரும் தன்னார்வலர்கள்.
X
குமரியில் ஆதரவற்றோர்களுக்கு கொரோனா பரிசோதனை, மூன்று வேளை உணவு, உடை வழங்கி அசத்தும் தன்னார்வலர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையோரம் சுற்றித்திரிந்த பிச்சைக்காரர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை மீட்ட தன்னார்வலர்கள், காவல்துறையினர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி உதவியுடன் அவர்களை நாகர்கோவிலில் உள்ள அரசுப் பள்ளியில் தங்கவைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதரவற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, தொடர்ந்து அவர்கள் குளிப்பதற்கும் நல்ல உடைகளை உடுப்பதற்கும் ஏற்பாடு செய்த தன்னார்வலர்கள் மூன்று வேளை உணவு அளித்து பராமரித்து வருகின்றனர்.

கேட்பதற்கு ஆள் இல்லாமல் சாலையில் படுத்து கிடந்த தங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் தன்னார்வளர்களுக்கு ஆதரவற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

வரும் நாட்களும் தினசரி சாலையோரங்களில் இருப்பவர்களை காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் முகாம்களுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகர்கோவில் மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் உதவ விருப்பமுள்ளவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!