ஆதரவற்றோருக்கு தினமும் உணவு - பாஜக நிர்வாகி.

ஆதரவற்றோருக்கு தினமும் உணவு -  பாஜக நிர்வாகி.
X
தானத்தில் சிறந்தது அன்னதானம்.

கொரோணா ஊரடங்கு புதிய கட்டுபாடுகள் அமலில் உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய வர்த்த நிறுவனங்கள், டீ கடைகள், முற்றுலுமாக அடைக்கபட்டு உள்ளன.

பேருந்துகள் உட்பட வாகன போக்குவரத்து நிறுத்தபட்டதால் சாலைகள் வெறிச்சோடிய நிலையில் தினசரி பேருந்து நிலையங்களில் உள்ள பயணிகள் மற்றும் பொதுமக்கள் கொடுக்கும் சிறிய வருவாயில் ஒருவேளை உணவு அருந்திய சாலையோரம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் முழு ஊராடங்கால் பசியால் தவித்தனர்.

ஆதரவற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்ட அரசு முன்வராத நிலையில் பாஜக மாவட்ட நிர்வாகியான முத்துராமன் தனது சொந்த செலவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவளித்து வருகிறார்.

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி பிற்பகல் உணவை அளிக்கும் பாஜக நிர்வாகியின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு ஆதரவற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!