கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் - ஆய்வு மேற்கொண்ட அனிதா.

கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் - ஆய்வு மேற்கொண்ட  அனிதா.
X
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றது, இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் சீற்றம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை சந்தித்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் நாகர்கோவில் வந்தார்.

தொடர்ந்து கனமழை மற்றும் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தேங்காய்ப்பட்டணம் - ராமன்துறை மற்றும் மஞ்சாலூமூடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களையும் வீடு இடிந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்க புறப்பட்டு சென்றார்.

நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வந்த அமைச்சரை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் மற்றும் பலர் வரவேற்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil