அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை-அனைத்து படுக்கைகளும் நிரம்பியது.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை-அனைத்து படுக்கைகளும் நிரம்பியது.
X
நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரிப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் 250 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் 890 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை தனி வார்டு செயல்பட்டு வருகிறது.

இது தவிர கோவிட் கேர் சென்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன, மேலும் மாவட்டம் முழுவதும் 10 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோணா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே மாவட்டத்தில் தக்கலை, குழித்துறை, கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் அரசு மருத்துவ மனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க எந்த வசதிகளும் செய்யப்படாததால் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரபட்டு நோயில் தன்மையை கொண்டு அவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் கோவிட் கேர் சென்டர்களிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரிப்பு, அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி காணப்படுகின்றன.

மேலும் படுக்கைக்காக நோயாளிகள் பலமணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோணா சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தி அந்தந்த பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!