காற்றில் பறக்கும் சமூக இடைவெளி - அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காற்றில் பறக்கும் சமூக இடைவெளி - அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X
கன்னியாகுமரி மாவட்ட தினசரி சந்தையில்

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதை தொடர்த்து, இந்த தீவிர தொற்றினை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் வரும் 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் முழு ஊராடங்க்கு தீவிரமாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தடைபடாமல் இருக்க காய்கறி, மளிகை, பால், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் பகல் 12 மணி வரை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு திறக்கவும் மீதமுள்ள கடைகள் திறக்க தடையும் விதித்தது,

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட ராமன்புதூர் தினசரி காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் குவிந்தனர்,

வியாபாரிகளும் தங்களது வியாபாரம் கெட்டுப்போக கூடாது என கருதி சமூக இடைவெளியை கடைபிடிக்க வற்புறுத்தாததாலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாததாலும் தொடர்ந்து மக்கள் கூட்டமாக இருக்கும் காட்சிகளை பார்க்கும் பொழுது சமூக இடைவெளியானது காற்றில் பறந்தாகவே காணப்பட்டது.

மேலும் தொடர்ந்து மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ள நிலையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஒழுங்கு படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!