ஒரே காம்பவுண்டில் குடியிருக்கும் ஏழு பேருக்கு கொரோனா

ஒரே காம்பவுண்டில் குடியிருக்கும் ஏழு பேருக்கு கொரோனா
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை பரவல் மிகவும் வேக மாக இருப்பதால் தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் பகுதியில் இன்று சனிக்கிழமை ஒரே காம்பவுண்டில் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த காம்பவுண்டுக்கு செல்லும் வழியை மாநகராட்சி பணியாளர்கள் தடுப்புகள் வைத்து அடைத்தனர். மேலும் அங்கு கிருமி நாசினி தெளித்தல் மற்றும் பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!