ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ

ஸ்டாலினுக்கு  வாழ்த்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ
X

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசிடமும் மத்திய அரசிடம் கேட்டுப் பெற நடவடிக்கை மேற்கொள்வேன் என நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற எம். ஆர். காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியை பாஜக வென்றுள்ளது இந்நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர் எம் ஆர் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். குமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் நான் வெற்றி பெற்ற நாகர்கோவில் தொகுதியை தலை சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என்று வாக்குறுதியை கொடுத்து 20 ஆண்டு காலம் கடந்து சட்டசபைக்குள் பாஜக வேட்பாளராக செல்லும் நான் தனித்தன்மையோடு செயல்படுவேன் என்று எம்.ஆர்.காந்தி செய்தியாளர்களிடம தெரிவித்தார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!