கடல் பாசியில் அல்வா கொடுத்த கட்சி திமுக-பொன்.ராதாகிருஷ்ணன்

கடல் பாசியில் அல்வா கொடுத்த கட்சி திமுக-பொன்.ராதாகிருஷ்ணன்
X

கடல் பாசியில் அல்வா கொடுத்த கட்சி திமுக என நாகர்கோவிலில் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன். இராதாகிருஷ்ணன் கூறும் போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை, 4 வழிச்சாலை, இரட்டை ரயில் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்ற தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன்.தேர்தல் வரும்போது எதிர்க்கட்சிகள் ஜாதி, மத ரீதியான பிரச்சாரங்களை திட்டமிட்டு பரப்பி வருகிறது.

1967 ம் ஆண்டு திமுக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி கொடுத்தது. அப்போது இதனை எப்படி நிறைவேற்ற முடியும் என காமராஜர் தடுத்தார். அப்போதே அடி கொடுத்திருந்தால் இப்போது திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இருக்காது.1967 ம் ஆண்டு கடல் பாசியில் அல்வா கொடுத்த கட்சி திமுக.இப்போதும் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. அதை எப்படி அவர்களால் நிறைவேற்ற முடியும் என கேள்வி எழுப்பிய பொன்.இராதாகிருஷ்ணன் திட்டங்களை செயல்படுத்துவதிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் அதிமுக அரசு தனித்தன்மையுடன் செயல்படுகிறது. அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது என தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!