வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிட்டிங் எம்எல்ஏ க்கு மீண்டும் சீட் வழங்க கூடாது என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்த நிலையில் அக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட நிலையில் திடீரென குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசார் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே, இரண்டாவது முறையாக குளச்சல் தொகுதியில் எம்எல்ஏ.,வாக பதவி வகித்து வரும் பிரின்ஸ் எம்எல்ஏ., தொகுதியையும் தொகுதி மக்களையும் மறந்து தனது குடும்பத்தை மட்டுமே கவனித்ததால் மீண்டும் இந்த தேர்தலில் சீட் வழங்க கூடாது என வலியுறுத்தினர்.மேலும் குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட நபரையே வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே விளவங்கோடு தொகுதியில் தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ,, விஜயதாரணிக்கு மீண்டும் சீட் வழங்க கூடாது என கூறி அந்த தொகுதியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் குளச்சல் தொகுதியிலும் போராட்டம் நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து மற்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக அந்த கட்சியை சேர்ந்தவர்களே போராட்டம் நடத்துவது பரபரப்பை உருவாக்கி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu