தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் -அமித்ஷா

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் -அமித்ஷா
X

வரும் சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குச் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி தொகுதி மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் என்று தெரிவித்தார்.

அமித்ஷா வருகையை முன்னிட்டு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், இந்து கல்லூரி சாலை, செட்டிகுளம், வேப்பமூடு, காமராஜர் சிலை ஆகிய பகுதிகளில், மத்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story