சுங்கான்கடை மலையில் காட்டுத் தீ

சுங்கான்கடை மலையில் காட்டுத் தீ
X

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை மலை பகுதியில் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் தீ மலை முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை மலை பகுதி உள்ளது. இங்கு நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் தீ மலை முழுவதும் பரவியது. ஏராளமான மரங்களில் தீ பரவியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அப்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இந்நிலையில் இரவு நேரம் என்பதாலும் கடுமையான வெப்பம் காரணமாகவும் தீயணைப்புத் துறையினரால் மலை பகுதிக்கு செல்ல முடியவில்லை. மலைப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் கிளம்பிய புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது.தீ காட்டு தீயாக பரவி இருப்பதால் உடனடியாக இதனை அணைப்பது கடினம் என தெரிவித்த வனத்துறையினர் காட்டு தீயால் விலங்குகள் வெளியேறி ஊருக்குள் பரவாமல் இருக்க தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business