பனை நுங்கு சாப்பிட்ட ராகுல்காந்தி

பனை நுங்கு சாப்பிட்ட ராகுல்காந்தி
X
சாலையோர கடையில் பனை நுங்கு சாப்பிட்ட ராகுல்காந்தி.

குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி கன்னியாகுமரி சர்ச் ரோட்டில் மக்கள் மத்தியில் பேசினார். இதை தொடர்ந்து தனது வாகனத்தில் அங்கிருந்து நாகர்கோவில் புறப்பட்ட ராகுல் காந்தி மந்தாரம்புதூர் பகுதியில் சாலையோரம் பெண்கள் பனை நுங்கு விற்பனை செய்வதை பார்த்து வாகனத்தை நிறுத்தினார்.

ஒரு தேசிய கட்சியின் தேசிய தலைவர் தனது கடைக்கு வருவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்ற பெண்களிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பனை நுங்கை வாங்கி ருசித்து சாப்பிட்டார். இதனைத் தொடர்ந்து நுங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் நுங்கிற்காக ரூ.500 பணத்தைக் கொடுத்த ராகுல்காந்தி பனை நுங்கு மிகவும் சுவையாக உள்ளதாக கூறி சென்றார். ராகுல்காந்தியின் இச்செயல் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு