வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை

வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை
X
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார், மணி மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

குமரி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் விட இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வந்த வசந்த குமார் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வசந்தகுமார் எம்.பி மரணமடைந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி மறைந்த வசந்தகுமார் எம்பியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவருக்கு கட்டப்பட உள்ள மணி மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

பின்னர் வசந்தகுமாரின் மனைவி மற்றும் அவரது மகன் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் வசந்த், உள்ளிட்ட வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ராகுல்காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!