தோவாளையில் புதிய திருமண மண்டப திறப்பு விழா
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் புதிய திருமண மண்டப திறப்பு விழா நடைபெற்றது.
இந்திய அளவில் புகழ் பெற்ற மலர் சந்தை அமைந்து இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கிராமத்தை சுற்றியுள்ள 13 கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு திருமண மண்டபம் அமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ. 2 கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அதன்படி திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இந்நிலையில் திருமண மண்டபத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.இதனிடையே தங்களின் நீண்ட நாள் கனவு நனவாகி உள்ள நிலையில் மின்னொளியில் ஜொலித்த திருமண மண்டபத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
ஒரு திருமணம் அல்லது ஏதாவது விசேஷங்கள் நடத்த வேண்டும் என்றால் மாநகர பகுதியை நாடி செல்ல வேண்டும் என்ற நிலை மாறி இப்போது குறைந்த வாடகையில் தங்கள் பகுதியில் திருமண மண்டபம் அமைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu